யார் அந்தப் பெண் என்று தெரியவில்லை. அவளோடு நல்ல பழக்கம் உள்ளது போல கடைத்தெருவில் பேசிக்கொண்டே வருகிறேன். நாங்கள் இருவரும் திருநல்வேலியில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரியவில்லை. சில நிமிட நடைக்குப் பிறகு அந்த இடம் வந்து விட்டது. உள்ளே இருந்து ஒரு குரல்,"உள்ள வாங்க தம்பி"
நான்: "இல்ல, பரவால்ல, லேட் ஆச்சு. போலாமா?"
சூழ்நிலை சற்று தெளிவாகியது. உள்ளே இருந்த ஆள் வீடுத்தரகர். எங்களுக்கு வாடகைக்கு சில வீடுகளைக் காட்டப்போகிறார்.
ஏதோ ஒரு வாகனத்தில் சிறிதுநேரப் பயணம். முதல் வீடு. ஒவ்வொரு அறையையும் நோட்டமிடுகிறோம். தரகிரடம் ஏதோ பேசுகிறேன். ஒரு கேள்வி மட்டும் நினைவில் உள்ளது; காரணம் அவர் கூறிய பதில்.
நான்: "வீடு மார்கெட்டுக்கு பக்கம் போல?"
தரகர்: "ஆமா தம்பி. ஆம்பளைக்கு அஞ்சு சந்து, பொம்பளைக்கு எட்டுச் சந்து" என்று சொல்லிச் சிரித்தார்.
உறக்கத்தின் அடைப்பில் சிக்கிய என் ஆழ்மனது, குழம்பிக், குலுக்கி போட்ட குப்பைகளில், நினைவில் இருக்கும் இக்கனவின் கடைசி வரி போன்று வேறெதுவும் என்னை பாதித்ததில்லை.
Showing posts with label கேட்டிராத சொலவடை. Show all posts
Showing posts with label கேட்டிராத சொலவடை. Show all posts
நித்திரையின் நிந்தனை
Subscribe to:
Posts (Atom)
