Vetti post 14: youtube, nudity etc.

Aug 8, Update: Elanko has made a post that gathered all our tweets and others. It should give you the context for this exchange.

{{அதுபோல‌ நீங்க‌ள் ஏன் நிர்வாண‌ப்ப‌ட‌ங்க‌ள் வ‌ந்த‌போது யூரியூப்பிற்கு முறையிட‌வில்லையா என‌ என்னிட‌ம் கேட்டிருந்தீர்க‌ள். என‌க்கு அது ஒரு பிர‌ச்சினையாக‌ இல்லாத‌போது நான் ஏன் முறையிட‌வேண்டும். அவ்வாறு முறையிட‌ நானொரு க‌லாசார‌வாதியும‌ல்ல‌.}} --

இளங்கோ, எனது நிலைப்பாட்டை நான் தெளிவாக ஏற்கனவே தெரிவித்துவிட்டேன், ஆனால் உங்களுக்கு அது தவறான புரிதலையே (மீண்டும்) உண்டாக்கி இருக்கிறது. மேலே நீங்கள் கூறியுள்ளது ஒரு உதாரணம். நான் கேட்ட கேள்வியின் அர்த்தம், உங்களுடைய ரசனை/ஒழுக்கம் பற்றியது அல்ல, youtube'இன் நடவடிக்கை முறை பற்றியது.

Youtube சட்டத்திற்கு உட்பட்டுத்தான் எதையும் செய்ய முடியும். அந்த வகையில் நீங்கள் விரும்பாத -- youtube விதிமுறைகளுக்கு உட்பட்டு -- ஒரு படத்தை நீக்கக் கோரினால் அவர்கள் நீக்கியே ஆக வேண்டும். இல்லையென்றால் "எங்களுக்கு அப்படி ஒரு படம்/படத்தில் இன்ன சமாச்சாரம் இருந்ததே தெரியாது" என்று நீதிமன்றத்திடம் சொல்ல முடியாது ("copyrights சம்மந்தப்பட்ட பல வழக்குளில் அவர்கள் குறிபிட்டுள்ள காரணம் அதுவே). Born free 'யை நீக்கக் கோரி பலர் கேட்டிருக்கூடிய பட்சத்தில் அது நீக்கப்படவேண்டிய படமே (as per youtube's rules).

எது நிர்வாணம், எது அரை-நிர்வாணம் என்பதற்கும் சட்டரீதியான அளவுகோல்களையே அவர்கள் கொண்டுள்ளார்கள் என நான் நினைக்கிறேன். மெல்லிய ஆடை அணிந்தாலும் 'tehnically not naked' என்று நீதிமன்றத்தில் வாதாட வாய்பிருக்கிறது. (அமெரிக்க சட்டப்படி ஆண்கள் மார்பகத்தை காட்டுவதும் பெண்கள் மார்புகளைக் காட்டுதலும் ஒன்று இல்லைதான். மேலாடையே அணியாமல் nipples மீது மட்டு ரெண்டு sticker ஒட்டிக்கொண்டால் அது nudity இல்லைதான்.) சட்டங்களும் நீதிமன்றகளும் அப்படி இருக்கையில் youtube'ஐ மட்டும் குறை சொல்லி என்ன பயன்? (எது graphic violence என்பதும் அது போன்றதே.)

உண்மையில் நடக்கும் வன்முறையை "gratuitous violence" என்று வகைப்படுத்த முடியாது. அதே போல born free படத்தில் வருபவை உண்மை நிகழ்சிகளை அடிப்படையாகக் கொண்டவையா என்பது அவர்களை பொறுத்தவரை -- சட்டப்படி -- தேவை/சம்மந்தம் இல்லாதது. (உங்களின் கூற்று எனக்கு புரியாமல் இல்லை, ஆனால் விவாதத்தின் பொருட்டு..). அமெரிக்கர்களுக்கு கழிவிரக்கம் உண்டாகும் வகையிலான எண்ணற்ற வன்முறை படங்களை மட்டும் அனுமதித்து விட்டார்களா என்ன? (அமெரிக்க பிணைக்கைதி ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் படம் ஒரு உதாரணம்)

ஆக நீங்கள் அவர்கள் நிலையின் முரணாகக் கருதும் எல்லா வீடியோ'களையும் அப்படித்தான் பார்க்க முடியும். அதாவது, அவர்களுக்கு தெரிந்தே அது இருக்கின்றதா/அவர்களின் விதி முறைகளுக்குள் இருக்கின்றதா என்று?

அடுத்து நீங்கள் கூறும் "அவசியமான பொழுது". இது என்னவென்று அனுமானித்து நான் முன்னரே இதற்கு தர்க்க ரீதியான பதில் சொல்லிவிட்டேன். ஆனால் மீண்டும் பேசுவதில் பிரச்சனை இல்லை.

நீங்கள் சொல்லும் "அவசியமான பொழுது" காட்சி வடிவத்திலான தீவிரமான அமெரிக்க/ஏகாதிபத்திய எதிர்ப்பு எனில், அவ்வாறன எந்த படத்தையும் youtube'இல் பார்க்க முடியாது -- நீங்கள் சொல்வது இதுதான் என்று வைக்கலாமா?

இப்போது இந்தக் கூற்றை மருதளிக்கும்ம் எத்துனை ஆதாரங்களை கொண்டு வரட்டும்? Wikileaks தளத்தின் அணைத்து (கிட்டத்தட்ட) படங்களும் youtube'இல் உள்ளது. சமீபத்தில் வெளியான 'ஈராக் செய்தியாளர்கள் படுகொலை' உட்பட. இது போல பல உதாரணங்களை அடுக்க முடியும்.

இனையம் என்ற ஊடகத்தில் இம்மாதிரியான சந்தேகங்கள் எவ்வளவு சரியானவை என்பது அடுத்த கேள்வி. Youtbe is owned by Google. The same company that takes to you to MIA's video page (in VIMEO and Dailymotion) when searched for Born Free. The results are not even sidlined, it's right on top.

ஆனால் இப்படி இருக்கவும் வாய்ப்புள்ளது: மாயா பாடல்களை வெளியிட்டுள்ள Universal Group முன்னைய காலங்களில் youtube 'இற்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. அதற்கு பழி தீர்க்க மாயா ஒரு சாக்காக பயன் பட்டிருக்கலாம். ச்ச, MIA ஏன் Universal Group'ஓடு வேலை செய்கிறார்?

மற்றோர் விடயம் (for arguement's sake): புணர்ச்சி, nudity, போன்றவற்றை பார்க்க பல நூறு free porn sites வந்துவிட்ட நிலையிலும் youtube'இல் அவை இருக்க வேண்டிய அவசியமென்ன? நாமெல்லாம் இன்னமும் ஆடைகள் அணிந்துகொண்டுதானே வெளியே செல்கிறோம்? அதாவது, நாம் இன்னும் இடம் பொருள் ஏவல் சார்ந்த ஒழுக்க/அற முறைகளைப் பற்றிக் கொண்டுதானே இருக்கிறோம்? (அது சரியா தவறா என்பது வேறு விடயம்) அது போல இணையத்தைப் பொறுத்தவரை youtube 'ஐ அனைவரும் 'ஆடை அணிந்த' இடமாக வைத்திருப்பதில் என்ன முரண்? சிறுவர்களுக்கு 'I am 18 years old' என்று அந்த button'இல் கிளிக் செய்ய எவ்வளவு நேரம் பிடிக்கும்? நாம் இன்னமும் சிறார்க்கு ஒரு ஒழுக்கம், பெரியோருக்கு ஒரு ஒழுக்கம் என்ற நிலையில்தான் இருக்கிறோம். அதைக் கடக்காதவரை (கடந்தே ஆகவேண்டும் என்றில்லை) இதுபோன்ற நிலை நீடிக்கத்தான் செய்யும்.

Addendum : நீங்கள் குறிபிட்டுள்ளதுபோல் Youtube மீதான விமர்சங்களை வைப்பது அவசியமே. Youtube ஒன்றும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் நம் விமர்சனங்கள் சீராக இல்லாது போனால் அது நம் நம்பகத்தன்மயைதன் குறைக்கும்.

Disclosure: இதில் நீங்கள் MIA'வின் வெளிபடையான ரசிகன், நான் அவரின் விமர்சகன் என்ற அளவில் இந்த விவாதம் disclosure செய்துகொள்வது நலமென்று எண்ணுகிறேன்.

August 9, update: Ilanko's Reply

August 9, update 2: My reply

இளங்கோ,

நீங்கள் குறிபிட்டுள்ள பலதுடன் உடன்படும் அதே வேளையில் இன்னமும் உங்கள் விவாத்தபுள்ளியும், எனதும் சற்றே வெவ்வேறு இடங்களில்தான் இருக்கின்றன -- இந்தக் குறிப்பிட்ட தொடரை பொறுத்தவரை. நான் முதலிலிருந்தே கூறிவருவது ஒன்றுதான்: MIA 'வின் பாடல் அவர்கள் (youtube ) விதிமுறைகளை அவர்கள் எப்படி அர்த்தம் கொள்கிறார்களோ அதன் அடிப்படையில்தான் நீக்கப்பட்டுள்ளது. இதில் சில சமயங்களில் முரண்பாடுகள் இருந்துள்ளன. அனால், அது வேண்டுமென்றே உள் ஆதாயத்தொடுதான் MIA 'வின் விஷயத்தில் நடந்தேன்று நான் நினைக்கவில்லை. (நீங்கள் இதை மறுப்பதற்கு உதாரணமாக அளித்த அணைத்து படங்களும் -- சிங்கள இராணுவர் தமிழ் கைதிகளை நிர்வாணப்படுத்தி சுட்டு தள்ளுவது உட்பட -- youtube 'இல் இருக்கின்றன)

"ஆக‌வே பெருநிறுவ‌ங்க‌ள் த‌ங்க‌ளைக் காத்துக்கொள்ள‌ எதையும் செய்யும்." -- பெருநிறுவனங்களுக்கும் தங்களை யாரிடமிருந்தோ "காத்துக்கொள்ள" வேண்டிய அவசியம் உருவாகின்றதை நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்கள். அந்த யாரோ சிலரில் சட்டமும் ஒன்று. சட்டம், சட்ட நடைமுறைப்படுத்தல், நீதிமன்றங்கள் போன்றவற்றின்மேலான பெருத்த அவநம்பிக்கை இருந்துமே இதைச் சொல்கிறேன்.

பெரிய கம்பனிகள் சட்டத்திற்கு பயந்துதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. ஒரு பெரிய corporation'ஐ பொறுத்தவரை எல்லாமே வரவு செலவுதான். அவர்கள் சட்டத்தை ஏய்க்க முயற்சி செய்தாலும் சரி, தண்டனை (தொகையை) அனுபவித்தாலும் சரி, வரவு செலவு என்ற கணக்கில்தான் பார்பார்கள். வழக்கை இழுத்தடிக்க ஆண செலவு, இறுதியாக வழங்கப்பட்ட தொகை என்று இறுதியில் நட்டமே -- அதாவது இலாபத்தில் குறைவு (இதில் ஆரம்பம் முதலே சட்டத்தை தெரிந்தே ஏய்த்து, பின்னாளில் மாட்டிக்கொள்ளும் scenario அடங்காது). அந்த வகையில் சட்டச் சிக்கலில் உழல்வது அவர்களுக்கு உவப்பானதல்ல. இதுதான் நான் கூற வந்த விடயம். (உண்மையில், youtube born free போன்ற படங்களை அனுமதிப்பதால் எந்த சட்டசிக்கலுக்கும் உள்ளாகாமல் கூடப் போகலாம். நன் முன்கூரியவை தர்க்கம் சார்ந்தது.)

Youtube 'இன் இலாப நோக்கை நான் எப்போதும் மறுக்கப்போவதில்லை. உண்மையைச் சொன்னால், MIA 'வின் பாடல் ஒரு குறிப்பிட்ட நுகர்வு வட்டத்தைக் கவரக் கூடியதே (consumers of 'counter-culture'). அது மட்டுமில்லாமல், அந்தப் பாடல் ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக வழக்கத்தை விட அதிக hits கிடைத்திருக்கலாம் (அதாவது அதிக விளம்பர வருமானம்). அப்படி இருந்தும் அவர்கள் MIA 'வின் பாடலை தடை செய்ய அவரின் அரசியல் தான் காரணம் என்றால், நாம் அதற்கு மேலதிக ஆதாரத்தை வைத்தலே சரியாக இருக்கும். அதுவும் vimeo போன்ற தளங்களில் இருக்கும் படத்தை Google முதலாவதாக சுட்டிக்காட்டும்பொழுது.

The question is simple: was Born Free's removal consistent with other videos that have been removed based on the same 'rules'. Whether those rules are good/bad is a different issue (even though I've made some points about it).

எது சிறார் மனதை பாதிக்கும், எது உண்மையான வன்முறை போன்றவை இந்த விஷயத்தின் மைய விவாதத்திற்கு அப்பாற்பட்டவை. சில நாட்கள் முன் இங்கு CBC வானொலியில் அது விவாதிக்கப்பட்டது (July 30, Q). Youtube'இல் ஒரு பெண் நிர்வானமாய் வரும் படம் முதலில் நீக்கப்பட்டு குறிப்பிட்டளவு எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆக Youtube 'இன் செயற்பாடுகள் ஒரு நேர்கோட்டில் இல்லைதான். ஆனால் இந்த 'நேர்கொட்டின்மையில்' எனக்கு ஏகாதிபத்தியம் சார்ந்த உள்-ஆதாயம் எதுவும் தென்படவில்லை. பொதுவாகவே இந்த விவாதம் பலரால் பலமுறை பல கோணங்களில் நின்று விவதிக்கப்பட்டதுதன் - எது கலை, எது கிளர்ச்சி ஊட்டக்கூடியது, எது வன்மறையை தூண்டவல்லது etc. இதில் நான் புதிதாகக் கூற ஏதுமில்லை.

நீங்கள் கூறியுள்ள மற்ற பல விடயங்களும் விவாத்தின் மையப் புள்ளியிலிருந்து விலகியே நிற்கின்றன. இருந்தாலும் அவைபற்றி என் சுருக்கமான கருத்துகளை/கேள்விகளை வைக்கிறேன்.

Youtube'இல் MIA பற்றி இருக்கும் அவதூறான மறுமொழிகள்: இது MIA'கு மட்டும்மல்ல, அனைவருக்கும் பொருந்தக் கூடியதுதான். அமெரிக்காவில் character assasination, libel போன்றவற்றிற்கு பெருமளவு சுதந்திரம் உள்ளது. இதற்கும் youtube வேறுவகையான அளவுகோல்களை கொண்டுள்ளது -- அவற்றையும் பெருமளவு பார்வையாளர்கள் பொறுப்பில் விட்டுள்ளது. மறுபடியும் அதே கேள்விதான்: MIA பற்றிய அவதூறுகள் மட்டும்தான் இருக்கின்றனவா?

"'என‌து இசையை காசிற்கு விற்க‌ விருப்ப‌மில்லை' என‌த் தெளிவாக‌க் கூறியிருக்கின்றார் என்ப‌தையும் க‌வ‌ன‌த்திற் கொள்ளாவேண்டும். " -- இது மிகவும் வேடிக்கையான வாசகம் இல்லையா? அவரின் பாடல் தகடுகள் இலவசமாகக் கிடைத்தனவா? அல்லது, அவரின் தளத்தில் போய் அனைவரும் இலவசமாக download செய்துகொள்ள முடியுமா? (Nine Inch Nails, Radiohead போன்றோரை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவும்.) மாயா Universal உறவு பற்றி நீங்கள் இன்னும் கொஞ்சம் ஆராய வேண்டும், அது வெறும் "கணவர் சம்மந்தப்பட்ட" விஷயம் அல்ல.

சரி, அவரின் வருமனாம் அனைத்தையும் ஏதோ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கிவிடுவார் என்று வைத்தாலும், அதே காரணத்தை Warren Buffet, Bill Gates போன்றவர்களுக்கும் பொறுத்த வேண்டும் அல்லவா (அவர்களும் தங்கள் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை 'நன் கொடைக்கு' வழங்கியுள்ளார்கள்)?

MIA'வின அரசியலை முழுதும் நிராகரிக்கும் பொருட்டு இதைக் கூறவில்லை. அவரிடமிருக்கும் கோட்பாட்டு ரீதியான முரண்களை கண்டுகொள்ளுதல், அவரது ஆளுமையை சரியாக (மிகையின்றி) அளவிடுதல் அவசியம். அதேபோல Youtube'இன் விதிமுறைகளை ஆதரிக்கும் பொருட்டு இவ்விவாதத்தை தொடங்கவில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். MIA ஏதோ கட்டுபடுத்தப்பட வேண்டிய, அபாயகரமான அமெரிக்க/ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், புரட்சியாளர் போலவும், அதற்காகவே அவரை youtube குறிவைத்தது என்ற தோற்றத்தைக் கேள்விப்படுதவே எனது எதிர்வினைகள். நீங்கள் நினைப்பது போல் அதன் அரசியல் ஒன்றும் அவ்வளவு உக்கிரமானதோ, புதுமையனாதோ அல்ல. இதுபோல் நிறையப் பார்த்தாயிற்று (youtube'இலேயே).

 
©2009 english-tamil