'நல்ல' நாடுகளும் புகலிட அரசியலும்

கனடா போன்ற 'நல்ல' நாடுகள் அகதிகளை வரவேற்க பல காரணங்கள் இருந்தாலும் இந்த இரண்டை நான் குறிப்பிட விரும்புகிறேன்:

1. It's a country with below replacement fertility rate. ஆக வெளி ஆட்களின் வருகை இந்த நாட்டிற்கு அவசியமாகிறது (அந்த மூன்று கோடி பேர் , ரெண்டரை ஆகாமல் இருக்க) . அது skilled labour'ஆக மட்டும் இருந்தால் unskilled work செய்ய ஆட்கள் தேவைப் படும். So they extract skilled work through 'processed, selective immigration' and uskilled work through asylum seekers.

2. கனடா, டென்மார்க், நார்வே போன்ற நாடுகளின் ஆதிக்கம் உலக அரசியலில் மிகச் சிறிய அளவே. அவர்கள் மற்ற நாடுகளோடு தங்களின் குடியை (power of their sovereignty) உயர்த்திப் பிடிக்கவும், தங்களது 'அற உணர்வை' (moral superiority) பறைசாற்றவும் அகதிகளுக்கும் இன்ன பிற மக்களுக்கும் புகலிடம் வழங்கப்படுகிறது.

Power of sovereignty:
யார் என்னை அச்சுறுத்துகின்றாரோ அவரை விட வலிமையானவரே எனக்கு பாதுகாப்பளிக்க முடியும். இந்த இயங்கியல் விதியில்தான் புகலிடம் வழங்குவதின் முக்கியமான அரசியல் அடங்கி உள்ளது. இலங்கையிலிருந்து கனடாவிற்கோ, ஆஸ்திரேலியாவிற்கோ செல்பவர்களின் கதி அந்த நாடுகளால் மட்டுமே தீமனிக்கப் படுகிறது. இதில் இலங்கை தலையிட முடியாது. ஒரு நாடு கட்டுப்பாட்டில் உள்ள நிலப்ரதேசம் (நீரும்) எது, அதில் உள்ள மக்களின் நிலை என்ன என்பவற்றை தானே தீர்மானிக்கும் அதிகாரத்தை அவ்வப்போது நிறுவ உதவும் பல வழிகளுள் புகலிடம் வழங்குதலும் ஒன்று.

Moral Superiority:
இதுவரை ஆப்ரிக்க நாடுகள், இலங்கை, சீனா, கியூபா போன்ற நாடுகளிலிருந்து பல லட்சம் மக்கள் ஆண்டு தோறும் 'வளர்ந்த' நாடுகளுக்கு புகலிடம் தேடிச் செல்கிறார்கள் (எதிர் திசையில் எத்துனை பேர் சென்றிருப்பார்கள்?). மேற்கத்திய நாடுகள் ஐ.நா, உலக வங்கி போன்ற நிர்மாணங்களை ஆட்படுத்த இந்த 'moral superiority' முக்கியமான கருவியாகிறது.
மற்ற நாடுகள் இந்த 'அற உணர்வின்' ஆதாயங்களை புரிந்து வைத்தாலும், தன் குடி மக்களைப் பொறுத்தவரை தன் நாடு 'நல்ல' நாடு என்ற கண்ணோட்டம் பேணப்படுகிறது. "உயரிய மனித உரிமைகளை கொண்ட இந்த திருநாட்டை நோக்கி மக்கள் வருவதில் என்ன ஆச்சர்யம்? வந்தாரை வாழ வைக்கும் அமெரிக்கா போன்ற நல்ல நாடு எதைச் செய்தாலும் அது சரியாகவே இருக்கும்," என்று பெரும்பன்மை அமெரிக்கர்கள் ஒருவகை தேசிய உயர்வு மனப்பான்மை மயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை அந்நிலையிலேயே வைத்திருக்க புகலிடம் வழங்குவதெல்லாம் சில்லறை செலவு. அது 'அளவுக்கு' மீறும்போது, அதையும் ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆக எப்படிப் பார்த்தாலும் லாபமே.

குறிப்பு: வினவு வெளியிட்ட இந்ததக் கட்டுரைக்கு எழுதிய மறுமொழியின் பகுதியே இப்பதிவு.

2 comments:

KALIMUTHU.V said...

wow its first post in tamil, more understandable and easy to read also,

its good moral about your opinion..

but why INDIA not like that to help mother of LTTE leader, further INDIA can retain its Ghandia way...

Regards,
KALIMUTHU.V

Anonymous said...

I agree... but still, compared to the situation most refugees have in their supposed homeland, the countries they migrate to are heavenly.

-kajan

Post a Comment

 
©2009 english-tamil