அசோகமித்திரன் கணையாழியில் 40 ஆண்டுகள் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர். அதில்தான் 30 ஆண்டுகளுக்கு மேலாக சுஜாதா கடைசிப் பக்கங்களை எழுதினார். ஒரு வகையில் இருவரும் சகாக்கள். அப்படிப்பட்டவர் சுஜாதாவின் மரணத்திற்கு எழுதியிருக்கும் இரங்கல் கட்டுரை என்ன தெரியுமா ? " சுஜாதா எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது என்னிடம் ஒரு கேமரா இருந்தது. அந்தக் கேமராவில் நாங்கள் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம்." ஐயா , என்னை நம்புங்கள். அவ்வளவுதான் இரங்கல் கட்டுரை. இப்படி ஒரு இரங்கல் கட்டுரை வேறு எந்த எழுத்தாளருக்காகவும் , உலகில் வேறு எந்த மொழியிலும் எழுதப் பட்டிருக்காது என்று நினைக்கிறேன். இருக்கட்டும் , எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வராமலா போகப் போகிறது ? ' நான் அசோகமித்திரன் வீட்டுக்குப் போனேன். அவர் ஒரு பூனை வளர்த்தார். அது என்னைப் பார்த்து மியாவ் என்று சொன்னது. நானும் மியாவ் என்று அதனிடம் சொன்னேன். ' எழுதுகிறேனா இல்லையா என்று பாருங்கள் அசோகமித்திரன்.
Source
1 comments:
/எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வராமலா போகப் போகிறது ? ' நான் அசோகமித்திரன் வீட்டுக்குப் போனேன். அவர் ஒரு பூனை வளர்த்தார். அது என்னைப் பார்த்து மியாவ் என்று சொன்னது. நானும் மியாவ் என்று அதனிடம் சொன்னேன். ' எழுதுகிறேனா இல்லையா என்று பாருங்கள்/
I agree with you too.
Ravi
Post a Comment